குடவாழை அரிசி!!!
பாரம்பரிய அரிசிகள் பட்டியலில் இன்று நாம்
பார்க்க இருப்பது குடவாழை என்று சொல்லப்படும் அரிசி வகையாகும். இது சிவப்பு நிற
நெல்லையும்,
சிவப்பு நிற
அரிசியையும் உடையது. இந்த நெல்லை அறுவடை செய்யும் சமயத்தில் கதிர்கள் நான்கு
பக்கங்களிலும் விரிந்து காட்சியளிக்கும். இது பார்ப்பதற்கே மிகவும் அழகாக
இருக்கும். மேலும் இது குடலை தூய்மைப்படுத்துவதாலும் இதற்கு “குடவாழை” என்ற பெயர் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய
ஏற்ற இரகம் இதுவாகும். தமிழகத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி
செய்கின்றனர்.
![]() |
குடவாழையின்
தனித்துவம்:
நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திய
பாரம்பரிய அரிசி வகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நெல்லானது நூற்றி முப்பது
நாட்கள் வயதுடையது. இது உவர் நிலத்தை தாங்கி வளரக்கூடியது. இது விவசாயிகளின் தோழன் அரிசி என்று
அழைக்கப்படுகிறது. கடலோர பகுதிகளில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய
ஏற்ற அரிசி வகை இது. வேதாரண்யத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த பாரம்பரிய நெல் சாகுபடியை
இன்றைக்கும் செய்து வருகிறார்கள்.
நெல்லின்
முக்கியத்துவம்:
குடவாழை நெல் இரகம் தமிழகத்திற்கு பெருமை
சேர்க்கும் ஒரு வகை நெல்லாகும். இதனை விதைத்த பிறகு ஒரு முறை மழை பெய்தால் போதும்.
மூன்றே நாட்களில் முளைத்து நிலத்தில் பச்சை போர்வை போர்த்தியது போலவே பார்க்கவே
கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இது அதி வேகமாக வளரக்கூடியது. அதே போல இயற்கை
சீற்றங்களை தாங்கி வாழும்.
விளக்கம் :
இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி
செய்யும் வழக்கம்,
இன்றளவும்
வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு
திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும். இதனால் குடவாழை என பெயர் பெற்றது.
அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.
பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.
குடவாழை
மருத்துவ பயன்கள்:
◆இந்த அரிசியை
சாப்பிடுவதால் உடலுக்கு தெம்பு கிடைக்கும்.
◆உடலுக்கு பலம்
மட்டும் இல்லாமல் தேகத்திற்கு ஒரு வித பளபளப்பு தரக்கூடியதாக அமைகிறது.
◆அஜீரணத்திற்கு
இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
◆தோல் வியாதிகள்
இருப்பவர்கள் இதனை எடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.
◆இரத்தத்தில்
சர்க்கரை அளவை சீராக வைத்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்.
◆குடலில் உள்ள
நச்சுகளை வெளியேற்றி குடலை சுத்தமாக வைத்து கொள்கிறது.
◆வயிற்று வலி, வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற வயிறு சம்பந்தமான நோய்களை
தீர்க்கும்.
◆மலச்சிக்கலுக்கு
இது ஒரு அருமருந்து.
◆குடவாழையில்
நார்ச்சத்து,
புரதம் மற்றும்
தாதுக்கள் உள்ளது. இதனை சாப்பிடும் போது உடல் ஆக்டிவாக இருக்கிறது.
◆அனைத்து வகையான
பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி வகை இது. வயலுக்கு செல்பவர்கள் இதனை பழைய சாதமாக
சாப்பிட எடுத்து செல்வர். இதனால் சோர்வு இல்லாமல் நீண்ட நாள் வேலை செய்ய முடியும்.
உணவு வகைகள்:
இந்த அரிசியில் சமைக்கப்படும் உணவு வகைகள்
இட்லி, கஞ்சி, தோசை, சாதம் ,பொங்கல்
குடவாழை அரிசி பொங்கல்
குடவாழை அரிசி குடலை சுத்தப்படுத்தக்கூடியது. செரிமானக்கோளாறை நீக்குவதுடன்
வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும்
5.அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து
குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும். விசில் போனவுடன் மூடியை
திறந்து மாதுளம் பழம்


0 Comments