தினமும் ஆயில் புல்லிங்(சரும பொலிவிற்கு,வெள்ளையான பற்கள்)


           https://amzn.to/4p8CNLv
தினமும் ஆயில் புல்லிங்

 

ஆயில் புல்லிங் செய்யும் முறை


காற்றோட்டமாக உள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் நம் மீது படும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். கழுத்து பகுதி, தோல் பகுதி இவைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி வாயின் எல்லா பாகங்களிலும் படும்படி சுழற்ற வேண்டும். வாயில் ஊற்றப்பட்ட எண்ணெயானது பசை போன்று வரும் வரை வைத்திருக்கலாம். அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் கசியும் வரை வைத்திருக்கலாம். 


இந்த ஆயில் புல்லிங்கை நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய், பால், பழச்சாறுகள், கோமியம் மற்றும் தேன் போன்ற பொருட்களாலும் கொப்பளிக்கலாம். ஆனால் நல்லெண்ணெய் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நல்லெண்ணையை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வாயில் வைத்திருந்து கொப்பளித்து துப்புவது நல்ல பலனை அளிக்கும். இந்த ஆயில் புல்லிங்கை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். ஆயில் புல்லிங் செய்து முடித்து சிறிது நேரம் கழித்து தான் காலை உணவு சாப்பிட வேண்டும்.

 

ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

 

எண்ணெய் கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை.


                                         

ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டாம். வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும்   நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாள் ஒன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதை செய்ய   வேண்டுமென்பது விதி.

 

இதன் மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல்  நோய்கள்மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற  நோய்கள்  குறைந்து விடுகிறது  என்கின்றனர்.

 

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு நோயின் தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி.

 


                                             
வெள்ளையான பற்கள்

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்கு தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்கள் கறைகள் நீங்கி, பற்கள்வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும். 

 

வாய் துர்நார்றம்

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நார்றம் அடிக்காமல் இருக்கும்.


                                                       

ஈறுகளில் இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல்  கூச்சம் நின்று பல்வலி மறையும்.

 

ஒற்றை  தலைவலி

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை  தலைவலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

 

 

இதன் மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல்  நோய்கள்மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற  நோய்கள்  குறைந்து விடுகிறது  என்கின்றனர்.

 

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு நோயின் தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி.

 


உற்சாகம் அதிகரிக்க

சிலர் எப்பொழுதும் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாகவே காணப்படுவார்கள். இதனால் இவர்களது அன்றாட பணியினை வேகமாக செயல்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சோம்பேறித்தனம் உள்ளவர்களுக்கு ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. பகல் பொழுதில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்பவர்களுக்கு இரவில் நிம்மதியான  தூக்கம் கிடைக்கும் என்பதும் உண்மை.        

பார்வைத் திறன் அதிகரிக்க

நல்லெண்ணெய்யின் குளிர்ச்சியால் நம் கண்களில் உள்ள நரம்புகள் சீராக இயங்குகிறது. இதன் மூலம் கண் பிரச்சனையானது தீர்க்கப்படுகிறது.

 

 

 


                                                     

சுவாச பிரச்சனைகளை தடுக்கிறது

வறட்டு இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை இவைகளுக்கெல்லாம் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

 

சரும பொலிவிற்கு

ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம் நம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும்.

 

மாதவிடாய் சீராக இருக்க

சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக வராது. ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் சமநிலை படுத்த பட்டு மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் வருகிறது.

 

தைராய்டு

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்கப்பட்டு, தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது.

 

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்

                     

"As an Amazon Associate I earn from qualifying purchases"



                          

 

 

 

Post a Comment

0 Comments