அத்திப்பழத்தின் நன்மைகள்( வெண்குஷ்டத்தை குணமாக்கும் ,கர்ப்பம் தரிக்க,ரத்த உற்பத்தி)

 

அத்திப்பழத்தின் நன்மைகள்

பழங்கள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான உணவு தான்.அனைத்து வகையான பழங்களிலும் அனைத்து சத்துக்களும் இருந்தாலும், அத்திப்பழத்தில் எல்லாப் பழங்களை விட அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன.அத்தி பழத்தில் என்ன சத்துக்கள் உள்ளன?,அவைகளை உண்பதால்  என்ன பயன்கள் நமக்கு கிடைக்கின்றன? என்பதனை பார்ப்போம்.

                                



1) போதைப் பழக்கத்தால் கல்லீரலில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க உலர்ந்த அத்திப் பழங்களை வினிகரில் ஒருவாரம் காலம் ஊற வைத்து பின்னர் தினமும் அதனை எடுத்து உண்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறைகின்றது.

2) உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது இதய நோய் வராமல் தடுக்கிறது. புற்று நோய் செல்கள் உருவாவதை தடுத்து நிறுத்துகின்றது.

3)உலர் அத்தி பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து உண்பதால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் மறைகின்றது.


4) உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால்,செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கின்றது. மூன்று அத்திப்பழங்களில் 5 கிராம் அளவுக்கு நார்ச் சத்து உள்ளது.இதனால் இந்த அத்திப்பழங்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது.

5) உலர்ந்த அத்திப் பழங்களில் கலோரிகளின் அளவு குறைவாகவே உள்ளது. அதாவது ஒரு துண்டு அத்திப்பழத்தில் 45 கலோரிகள் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.   


                                


6) அத்திப் பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து,அதிகாலையில் பழங்களையும் சாப்பிட்டு அந்த தண்ணீரையும் குடித்து வர முகத்தில் சுருக்கங்கள் நீங்குகின்றன . முடி வளர்ச்சிக்கும் இது உதவுகின்றது.


7) தினமும் பழங்கள் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.இதில் இரும்புச்சத்து 2% உள்ளது.ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. ரத்த சோகை வராமல் தடுக்கின்றது.

8) உலர்ந்த பழத்தை தினமும் உண்பதால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் புண்கள் குணமாகும்.மற்றும் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல் கரைந்துவிடும்.

9)வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் ஆகியவைகளை குணமாக்க, அத்தி மர இலையைக் கொதிக்கும் நீரில் இட்டு, அந்நீரை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம் .

10) உணவில் உப்பு அதிக அளவில் சேர்ப்பதால், சோடியத்தின் அளவு அதிகமாகி, பொட்டாசியத்தின் அளவு குறைகின்றது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அத்திப்பழத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாகவும், சோடியத்தின் அளவு குறைவாகவும் இருப்பதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கப்படுகிறது.

https://amzn.to/48bSFpo


                                 

11)ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் இருக்கின்றது. இது ஒரு மனிதனுக்கு தேவையான ஒரு நாளின் கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் அத்திப்பழத்தை எடுப்பதால்,மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.

12) உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் ஏ ,அஸ்கார்பிக் ஆசிட், நிக்கோடினிக் ஆசிட் இருப்பதால் இதனை உண்டு வரும்பொழுது கண்பார்வை அதிகரிக்கின்றது.

13) இரவில் நீண்ட நேரம் ஆகியும் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், இரவு நேரத்தில் உலர் அத்திப் பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலமாக நல்ல தூக்கம் வரும்.

14) சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

15)உலர்ந்த அத்திப் பழத்தை தினமும் எடுத்துக்கொள்வதால் கால்சியத்தின் அளவு அதிகரிக்கிறது.எனவே எலும்புகள் பலன் அடைகின்றன மற்றும் எலும்புகள் தேய்மானம் அடைவதில்லை.

16)உலர்ந்த அத்திப்பழம் ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு-ன் அளவை குறைக்கின்றது. ட்ரைகிளிசரைட்ஸ் என்பது கொழுப்பு துகள்கள்.இவைகள் ரத்தநாளங்களில் ஒட்டி விடுவதால் மாரடைப்பு வருகின்றது.இந்த உலர்ந்த அத்திப் பழங்கள் அந்தக் கொழுப்பு துகள்களை வெளியேற்றுகிறது.இதனால் ரத்தம் சீராக இதயத்திற்கு செல்வதால் இதயம் சீராக வேலை செய்கின்றது.

17)உலர்ந்த அத்திப்பழத்தில் துத்தநாகம், மக்னீசியம் இருப்பதால் வேகமாக கர்ப்பம் தரிக்க உதவி செய்கின்றது.


                                

18) மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வருவதிலிருந்து தடுக்கின்றது.

19)வலிப்பு நோய் மற்றும் உடல் சோர்வுகள் வராமல் பாதுகாக்கிறது.

20) மூச்சு குழாயில் உள்ள அசுத்தங்களை நீக்குகின்றது.தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் நுரையீரல் பலம் பெறுகின்றன.

இவ்வளவு நன்மைகள் இருப்பதால், இதை நாமும் அனுதினமும் எடுத்துக்கொண்டு, குழந்தைகளுக்கும் கொடுப்போம்.

"As an Amazon Associate I earn from qualifying purchases"

Post a Comment

0 Comments