பாரம்பரிய நெல் 7.காலா நமக் அரிசி("தாய்ப்பால் சுரக்க செய்யும் )

 

                            
                                                

காலா நமக் அரிசி/KAALA NAMAK RICE

 "As an Amazon Associate I earn from qualifying purchases"

 

பெயர் காரணம் :

காலா நமக்பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்று .இந்திய வடமொழியில் காலா நமக்என பெயர் பெற்றுள்ளது, ‘காலா’ → “கருப்பு”, ‘நமக்’ → “உப்பு” (Black salt) கருப்பு நிற மேலுறையோடு (உமி) காணப்படுவதால் . இப்பெயர் பெற்றிருக்கும்

 

 

தனித்துவம் (Specialty):

இந்தியாவின் சிறந்த மற்றும் நறுமணம் மிகுந்த நெல் வகையான இது, புத்தக்(Buddha) காலமான கி. மு 6 ஆம் நூற்றாண்டு (600 BC) முதலே சாகுபடிச் செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இயற்கை உணவுகளை (Natural Foods) 3 வகையாகப் பிரிக்கலாம். அவை சாத்வீகம்(Sathvik), சக்தி விரய உணவுகள், சக்தி விரயம் ஆகாத உணவுகள்.

                          


                                                      

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் இமாலய பகுதியில் உள்ள தெராய் நிலப்பரப்பில் பிரதானமாக விளைவிக்கப்பட்ட இந்நெல் இரகம், 1998 - 1999 ஆண்டுகளில் ஏற்பட்ட இதன் பூங்கொத்து வெடிப்பும்மற்றும் சில தொற்றுநோய்கள் காரணமாகவும்இந்த நெல் சாகுபடிபடிப்படியாக குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது


காலா நமக்அரிசி சாத்வீக குணத்தை ஏற்படுத்தக் கூடியது. உலகெங்கும் உள்ள புத்தபிட்சுகள் காலா நமக்நெல்லில் சமைத்த உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர்.

                                                              


                                                            
 
காலா நமக்உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):

மனிதனின் முக்குணங்களில் முதன்மையான குணமான சாத்விக குணத்தை தரவல்ல காலா நமக், சிறுநீரகம், இரத்தப் புற்று நோய், மூளை, மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் எதிர்க்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. மேலும், இவ்வரிசிச் சோறு தொடர்ந்து உண்பதன் மூலம், நீரிழிவு மற்றும் குருதி அழுத்தம் (BP) போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தவதாக கூறப்படுகிறது

 


 

"தாய்ப்பால் சுரக்க செய்யும் காலா நமக் அரிசி"

                                        

                                                   
காலா நமக் அரிசியின் பயன்கள்:

"As an Amazon Associate I earn from qualifying purchases"

*கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற உணவாக இந்த காலா நமக் அரிசி அமைகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் தரக்கூடிய ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலா நமக் அரிசியை சாப்பிடுவது நல்லது. 


*பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ வைத்து சாப்பிட்டால்  தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.


*சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். 


*தோல் நோய்களை எதிர்த்து போராடும் தன்மை காலா நமக் அரிசிக்கு உண்டு. 


*இரத்தப் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கிறது காலா நமக் அரிசி. 


*இந்த அரிசி நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. 

                                                                    

                                                           

Post a Comment

0 Comments