பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்

 

பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்

 

நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார். பாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார்.

மண்ணுக்கேற்ற விதைhttps://amzn.to/48evpGY

இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சிவந்த, நடுத்தரமான நெல் ரகம். அரிசியும் சிவப்புதான். நடவு செய்யவும் நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம்.

                                                         

                            

தாங்கும் திறன்

பாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது, விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்கப்படாது. கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்குப் பிறகே முளைக்கும் தன்மை கொண்டது.

மருத்துவக் குணம்

மருத்துவக் குணம் கொண்ட இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் `டப்பா பால்பவுடர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்


                                

https://amzn.to/48evpGY

பூங்கார் அரிசி

 

ஆதாரம் : நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளுவர் மாவட்டம்

 

 "As an Amazon Associate I earn from qualifying purchases"

 

பூங்கார் அரிசியின் சத்துக்கள்(Nutrients) :

நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டி ஆக்சிடென்ட், தயாமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

 

பூங்கார் அரிசியின் பயன்கள் (Benefits):

1.உடலுக்கு நல்ல வலுக்குடுக்கும் குறிப்பாக பெண்களுக்கு.
கர்ப்பிணிகள், ஆறு மாதங்களுக்குப் பின், பூங்கார் அரிசி உணவில் தினமும் சேர்த்து கொண்டால் சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும்.

2.பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கச் செய்யும்.

 

3.மாதவிடாய் பிரச்னை இருந்தால் முற்றிலுமாக சரி செய்துவிடும்.

 

4.இதில் புட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கர்ப்பிணிகள்       சாப்பிடுவது நல்லது.

5.கால், இடுப்பு வலி நீங்கும்.

                           





 

பூங்கார் அரிசி உணவில் சேர்த்து கொள்ள சில வழிகள் (Methods for Cooking):

1. அரிசியை கஞ்சியாக வைத்து குடிக்கலாம்.

2.அரிசி சாதமாக வடித்தும் உண்ணலாம் ஆனால் அரிசியை 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

3. இட்லி,தோசை மாவு அரைக்கும் போது கருப்பு உளுந்து 3 : 1 அளவில் ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்

4. அரிசியை ஊற வைத்து வெய்யிலில் காய வைத்து மாவு அரைத்து புட்டு, இடியாப்பம் செய்தும் சாப்பிடலாம்

 

                                    

 


                                      

 

பூங்கார் அரிசி புட்டு

·         பூங்கார் அரிசி - 1 கப்

·         வெல்லம் - 3/4 கப்

·         துருவிய தேங்காய் - 1/4 கப்

·         நெய் - 2 டேபிள் ஸ்பூன்

·         திராட்சை, முந்நிரி, ஏலக்காய் - தலா 4

·         உப்பு - 1 டீஸ்பூன்

 

                               

                                          

Directions

·         அரிசியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும் .

 

·         பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.

 

·         அரிசியில் நீரை வடித்து மிக்சியில் அரைக்கவும். நீர் சேர்க தேவையில்லை.

 

·         அரைத்த அரிசி பொடியை ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆரவைக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும்.

 

·         ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

நெய்யில் முந்திரி திராட்சை வருத்து வெல்ல பாகில் சேர்க்கவும்.

 

·         ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

 

·         நன்றாக கலக்கவும். கம்பி பதம் வந்ததும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

                                            

Post a Comment

0 Comments