மாப்பிள்ளை
சம்பா
முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர்
வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது
மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.
முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட
கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல்
தருகிறது மாப்பிள்ளைச்சம்பா.
மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள். உடலுக்கு பெரும் பலம் அளிக்ககூடிய மாப்பிள்ளை சம்பா மீண்டும் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்துக்கு வந்திருப்பது நன்மை பயக்ககூடியதே. குறிப்பாக இளவயது ஆண்களுக்கு. அப்படி என்னதான் இருக்கு மாப்பிள்ளை சம்பாவில்..
ஆண்மை அதிகரிக்கhttps://amzn.to/4peKVu2
ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக
அதிகரித்துவருகிறது. அன்றாட உணவு பழக்கங்கள் மாற்றத்திலும் வாழ்க்கை முறையும்
இதற்கு பெரும் காரணங்களாகிவிட்டது. உணவே மருந்து என்பது நோய்களுக்கு மட்டுமல்ல, ஆண்மை குறைபாட்டுக்கும் உண்டு. ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும்.,
உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில்
உண்டு. ஆண்மை பலவீனத்தை உணரும் ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை
தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கிடைக்கும். ஒரு மாதத்தில் பலனும் தெரிய
ஆரம்பிக்கும்.
நீரிழிவு
கட்டுக்குள் வர
நீரிழிவு
நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை.
அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து
சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை
காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு
மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு
நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
உடலுக்கு
வலு கொடுக்கும்
மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.
உடலில்
இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல்
தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும்
உதவுகிறது.
இருபாலருக்கும்
அதிகப்படியான உடலுக்கு வேண்டிய சத்துகள் கூடுதலாக ஆண்களுக்கு ஆண்மை தன்மையும்
தருகிறது
மாப்பிள்ளைச் சம்பா
மாப்பிள்ளைச் சம்பாஇந்தியாவில் 20,000 பாரம்பரிய நெல் வகைகள்
இருந்தன. அவற்றுள் பல, நவீன நெல் ரகங்களின் வரவால்
அழிந்துவிட்டன.தற்போது சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா,
காட்டுப் பொன்னி, சின்னப் பொன்னி, பாசுமதி, கிச்சிலி சம்பா உள்ளிட்ட 100 முதல் 150 வகையான நெல் ரகங்கள் மட்டுமே புழக்கத்தில்
உள்ளன. அவையும் குறைந்த அளவே பயிரிடப்படுகின்றன.இந்தியாவில் காலங்காலமாகப் பயிர்
செய்யப்பட்டு வரும் பாரம்பரிய நெல் வகைகள் பலவும் மருத்துவக் குணம் மிகுந்தவை.
அவற்றிலும்
மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை மிக்கது.பெயர் வரக் காரணம்:பழங்காலத்தில் ஒருவனுக்கு
பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட
இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி,
அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர்.
இந்த ரக அரிசியை
சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் ஏற்பட்டதாம்.
- பயிரைப்பற்றி….இந்த
நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. ஏழு அடி உயரத்தில்
வளரக் கூடியது.வயது 160 நாட்கள். நேரடி விதைப்பு செய்தால் 150 நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.நிலத்தில் தண்ணீரே இல்லாமல்,
ஒரு மாதக் காலத்துக்கு நிலம் காய்ந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா
பயிர் வாடாது.
- சீற்றம் தாங்கும்
அதேபோல கனமழைக் காலங்களில் நெற்பயிர் பல நாட்கள் நீரில் மூழ்கிக்
கிடந்தாலும்கூட மாப்பிள்ளை சம்பா பயிர் அழுகாது.
- புரதம், நார்,
தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
- ஆண்மைத் தன்மை
அதிகரிக்கும்
- தன் அரிசியை
வேகவைக்கும்போது வடிக்கும் கஞ்சியில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் கிடைக்கும் ருசியே தனிதான்.
- ஐந்து நட்சத்திர
ஓட்டல்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலும்கூட இந்தச் சுவை கிடைக்காது என்று
சொல்லலாம்.
- கஞ்சியே இவ்வளவு ருசி என்றால், சோறு எவ்வளவு சுவையாக இருக்கும்? https://amzn.to/4peKVu2
- உடலுக்கு வலுவைத்
தரக்கூடிய ஏராளமான சத்துகளும் மாப்பிள்ளைச் சம்பாவில் உண்டு.
- இதற்கெல்லாம் மேலாக
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய,
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நெல் ரகம்
இது.
- இரும்புசத்து(Iron) மற்றும் துத்தநாக(Zinc) சக்தி கொண்டது.
- ஹீமோகுளோபின் மற்றும்
மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
- தசைகள் மற்றும்
திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது.
- பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை
சுத்தரிக்கிறது.
- உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. இதில், உள்ள தனிமம், Iron, Zinc, Manganese, பாஸ்பரஸ், molybdenum, magnesium,
மேலும் கால்சியம் சோடியம் இதில் இல்லை.
- இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு
உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது.
- Celiac குடல்
கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல்
இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
- ஹீமோகுளோபின் அதிக
படுத்துகின்றது. நுண்ணீய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது வைட்டமின் B1 உள்ளதால்
வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
- தாம்பத்ய குறைபாடுகளை
போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம்
மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை
எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்
குறிப்பு:50 கிராம் அளவு கணக்கில், இதில் 3 கிராம் அளவில், நார்சத்து 48 கிராம் கார்போ ஹைட்ரட் 8 கிராம் புரதம
மாப்பிள்ளை சம்பா அதிரசம் செய்முறை
·
மாப்பிள்ளை சம்பா அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து நிழலில்
உலரவிடவும். அரிசி முக்கால் பதம் உலர்ந்ததும் மெஷினில் கொடுத்து மாவாக அரைக்கவும்.
அரைத்த மாப்பிள்ளை சம்பா அரிசி மாவுடன் பச்சரிசி மாவு, ஏலக்காய்த்தூள்
சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாகு வெல்லத்தை சேர்த்து
தண்ணீர் விட்டு கரையவிடவும். வெல்லக்கரைசல் உருட்டு பதத்துக்கு வரும்வரை காய்ச்சி
அடுப்பை அணைக்கவும், இத்துடன் மாவை சேர்த்துக் கிளறவும்.
பிறகு, மாவை ஆறவிட்டு மூடி வைக்கவும்.
·
மறுநாள் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு
மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதிரசம் பதத்துக்கு தட்டி வைக்கவும். அடுப்பில்
வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தட்டியவற்றைச் சேர்த்து எண்ணெயில்
பொரித்தெடுக்கவும். பிறகு, ஜல்லிக்கரண்டியால் அதிரசத்தை அழுத்தி எண்ணெய்
வடிந்ததும் ஆறவிட்டு பரிமாறவும்.
தேவையானவை:
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
பாகு வெல்லம் - ஒன்றேகால் கப்
ஏலக்காய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மாப்பிள்ளை சம்பா உப்புமா
மாப்பிள்ளை
சம்பா அரிசி ரெசிபி
மாலையில்
ஒரு கப் அரிசியை சுத்தம் செய்து கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும்.
சிறிது சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை நீராகாரம் குடித்து வந்தால் உடலில்
பல வியாதிகளும் கட்டுப்படும் உடலுக்கு வலு கிடைக்கும்.
சாதம்
வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து
இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். அதோடு வயிற்றுப்புண்,
வயிறுவலி.. வாய்ப்புண் குணமாகும். இதை சாதமாக்கி சாப்பிடலாம். இட்லி,
தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும்
பலன் நிறைவாகவே கிடைக்கும்.





2 Comments